Chief Minister's letter to volunteers [Image Source : Twitter/@arivalayam]
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார்.
அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், 3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொள்கிறது. இது மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை.
வரலாற்றின் பிறையில், தமிழகமும் திமுகவும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம், தளராத உறுதியுடன் மீண்டும் அதைச் செய்வோம்.
இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்.’ என பதிவிட்டுளளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…