யமஹா நிறுவனத்தின் புதிய வகை ஆர்15 வி3 மாடல் பைக்குகள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 கட்டணத்திற்கு முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய பி.எஸ். 6 யமஹா ஆர்15 வி3 மாடல் பைக்கில் 155சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.6 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் இருக்கிறது. இதற்கு முன் விற்பனை செய்யப்படும் பி.எஸ்.4 மாடல்களில் இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் செயல்திறனும், பி.எஸ். 6 என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேரியபிள் வால்வ் ஆக்டிவேஷன் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை சீரான வேகத்தில் இயக்க வழி செய்கிறது.
யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்நிலையில் மூன்று நிற மாடல் பைக்குகளின் விலை ரூ.1.46 லட்சம், ரூ.1.45 லட்சம் மற்றும் ரூ.1.47 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜி.பி. லிமிட்டெட் எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.43 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…