நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த மாணவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு மாணவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த சம்பவம் நடக்கும் போது உடன் இருந்தனர்.
இந்நிலையில் அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.கண்டங்கள் வலுக்கவே இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார் அந்த விளக்கத்தில், என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்த போதிலும் பல தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீலகிரி மசினக்குடி காவல்நிலையத்தில் மாணவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…