திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பின் போது தனுஷ், கருணாஸ், கென் கருணாஸ் மூவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யாமேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள்.
மேலும் படத்தில், பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் போது நடிகர் தனுஷ், கருணாஸ், கென் கருணாஸ் மூவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் கென் கருணாஸ் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு தனுஷ் – கென் கருணாஸ் இருவரும் அசுரன் படத்தில் நடித்திருந்தார்கள். அதாவது, சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷும், சிதம்பரம் கதாபாத்திரத்தில் தனுஷிற்கு மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…