பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியது குறித்து நடன இயக்குனர் பிருந்தா பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .
தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நடன இயக்குனர் பிருந்தா பணியாற்றி வருகிறார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிருந்தா,எனது கனவு குழு பொன்னியின் செல்வன்.எனது குரு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி.அவர் உண்மையான மேதை.ரவி வர்மனின் ஒளிப்பதிவில். அனைத்து காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளது.அனைவரையும் தூண்டும் அளவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் பாடலில் நடனம் அமைத்ததில் மேலும் மகிழ்ச்சி.எனது பின்பலம் என் உதவியாளர்கள் என்றும் , கடைசியாக என் பலம் என் நடனக்குழுதான்’ என்று புகைப்படத்துடன் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…