விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து திரையரங்கில் மாஸ்டர் படம் பார்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைலண்டாக விஜய் இன்று காலை 7 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரையுலகினை சேர்ந்த பிரபலங்களும் விஜயின் மாஸ்டர் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்த நடிகரின் படங்கள் திரைக்கு வந்தாலும் அந்த நடிகர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புவது போல, விஜயின் ரசிகர்களும் ஆர்வத்துடன் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷிடம் கேள்வி எழுப்பி வந்தனர். லோகேஷ் கனகராஜும் விஜயிடம் இது குறித்து பேசுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள தேவி திரையரங்கில் காலை 7 மணி ஃபர்ஸ்ட் ஷோவுக்கு விஜய் வந்ததாகவும், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளதாம். சைலண்டாக விஜய் வந்து தனது படத்தை பார்த்து சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…