இசையமைப்பாளர் டி.இமான் தயார் காலமான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்தார் அதில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பாக கண்ணான கண்ணே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமானின் தயார் காலமானார். இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது “இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக தெரியாது.எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வீர்கள் என்று என்று எனக்கு வலுவான நம்பிக்கை இருந்தது விரைவில் திரும்பி வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். டி இமானின் தயார் மறைவுக்கு பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…