கொரோனா உயிரிழப்பு விகிதம் பூஜ்ஜியம்! கொரோனா வைரஸை கட்டுபடுத்தி வெற்றிகண்ட வியட்நாம்!

Published by
லீனா

வியட்நாம் கொரோனாவை வென்று வெற்றி காண்டது எப்படி?

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்க துவங்கியது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலாமல், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திணறி வருகின்ற நிலையில், வியட்நாம் கொரோனாவை வென்று வெற்றி கண்டுள்ளது.

வியட்நாமை பொறுத்தவரையில், கொரோனா உயிரிழப்பு விகிதம் பூஜ்யமாக தான் உள்ளது. வியட்நாம் 9.7கோடி மக்கள் தொகையை கொண்டது. அங்கு, சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்ட உடனே, வியட்நாம் – சீனா எல்லையை அந்நாட்டு அரசு உடனே மூடியது.

இருப்பினும் வியட்நாமில் மொத்தம் 270 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனே, அங்கு அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டு அந்நாட்டு அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. மேலும், தனிமனித இடைவெளி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தை கடுமையாக்கிய வியட்நாம் அரசு, பல வழிகளில் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு ஏடிஎம் மூலம் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தது.

வியட்நாமில் ஜனவரி மாதம் கொரோனா பரிசோதனையில், ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து, பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள கருவிகளை உருவாக்கியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் முழு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்களை உடனே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அரசு எடுத்த  அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

வியட்நாமில் ஏற்கனவே சார்ஸ் வைரஸை கையாண்ட அனுபவம், இந்த கொரோனா வைரஸை விரட்டியடிக்கவும் கை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்குள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையும் இதற்க்கு காரணமாக கூறுகின்றனர் வல்லுநர்கள். இதனையடுத்து, அண்மைக்காலமாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், அந்நாட்டு  அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. வியட்நாம் கொரோனாவை வெற்றிக் கொள்ள அரசின் துரித நடவடிக்கையும், மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் இதற்க்கு காரணம் என்கின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

6 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago