பிருத்விராஜ் “ஆடுஜீவிதம்” படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமீபத்தில் ஜோர்டானிலிருந்து திரும்பினார். பின் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிருத்விராஜ் புதிய படமான ‘ஜன கண மன’ படப்பிடிப்பில் நடிக்க சென்றார்.
ராணி படத்திற்குப் பிறகு திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய படம் ‘ஜன கண மன’ படத்தின் முதல் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று நிறைவடைந்தது. முதல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கொரோனா சோதனை செய்தபோது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், தற்போது கொச்சியில் உள்ள அதே ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார். இதன் மூலம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரித்விராஜ் வெளியிட்ட அறிக்கையில், நான் தனிமையில் இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…