‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனோ தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகியோர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,மலையாளத்தில் ‘மாயநதி’ மற்றும் தமிழில் தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் விஷாலின் ‘ஆக்சன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:”நான் கொரொனோ பரிசோதனை செய்ததில் எனக்கு கொரொனோ பாசிடிவ் என வந்துள்ளது.அதனால்,நான் முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி என அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து வருகிறேன்.அதைப்போல, நீங்கள் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்,மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…