ஹாங் காங்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஹாங் காங்கில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் கூறுகையில், நாங்கள் தற்போது அதிகரித்துள்ள வைரஸ் பரவல், எங்கள் மருத்துவமனை அமைப்பு வீழ்ச்சியடைய வழிவகுக்கும் மற்றும் குறிப்பாக முதியோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் அன்புக்குரியவர்கள், எங்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் ஹாங்காங்கைப் பாதுகாப்பதற்காக, சமூக தொலைதூர நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு னாட்களாக இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் தொடக்கத்தில், சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது, ஹாங் காங்-கும் பாதிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் குறிப்பித்தக்க மாற்றம் கிடைத்தது. ஆனால், ஜூன் மாத இறுதியில் இந்த வைரஸ் பரவ தொடங்கிய போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான மூலத்தை கண்டறிவது குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை தாண்டிய லாரிகள், வான் மற்றும் கடல் பணியாளர்கள் மற்றும் சில உற்பத்தி நிர்வாகிகள் உட்பட “அத்தியாவசிய பணியாளர்களுக்கு” அரசாங்கம் வழங்கிய வழக்கமான 14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வண்ணம், விமான நிலையத்திற்கு அருகில் தற்காலிகமாக 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு சீன அதிகாரிகள் உதவ முன்வந்துள்ளனர்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…