கொரோனா வைரஸ்.! ஒரே நாளில் 43 பேர் பலி.! சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை .!

Published by
murugan
  • இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
  • சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த பாதிப்பால் தினமும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா வைரஸுக்கு  உலகம் முழுவதும் உள்ள பல ஆய்வகங்களில் தடுப்பு மருந்தினை உருவாக்க முயற்சி செய்து விஞ்ஞானிகள் வருகின்றனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சீனாவில் உள்ள உகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் , தொடர் கண்காணித்து வருவதாகவும் கூறினர்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago