முழுஊரடங்கு அறிவித்த அதிபர்..!இப்போது தான் விழித்தீர்களா!??பறக்கும் விமர்சனங்கள்!

Published by
kavitha

கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னக்கு தள்ளிவிட்டு முன்னேறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே கடும் அச்சத்தில் இருந்து வரும் சூழல் அங்கு பதற்றத்தை தணிக்கவும் பரவலை கட்டுப்படுத்தவும்  அதிரடி நடவடிக்கைகளை அரசு தற்போது  எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே  நியூயார்க்கில் முழு ஊரடங்கு உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

உலகம் முகழுவதும் பரவி தொற்றால் கடும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வரும் கொலைக்கார கொரோனாவிற்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 7 லட்சத்தை தாண்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பலி எண்ணிகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பிற்கு கடுமையாக ஆளாகியதாக இத்தாலி கூறப்பட்டது.அங்கு மக்கள் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக மடிந்தனர்.

அங்கு பிணக்குவியல்களை கண்ணால் பார்க்க முடிந்தது.கல்லறைகளே அதிகம் என்று இருக்க தன் வாழ்நாளில் இப்படி ஒரு அழிவை அந்நாடு சந்தித்து இருக்காது என்று எல்லாம் இத்தாலி குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் வெளியானது.இதனால் கொரோனா பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டது இத்தாலி தான் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது இத்தாலி ஒரு அடி பின்னுக்கு தள்ளி அசுர வேகத்தில் அமெரிக்கா முன்னேறி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கையானது 2,438; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.நிலைமை கைவிட்டு சென்றதை கைக்கட்டிக் கொண்டு நின்ற அதிபர் உட்பட அனைவரும் அபாயத்தை சுதாரித்து கொண்டு நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த தற்போது அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபரின் இந்த முடிவிற்கு கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.வைரஸ் குறித்து முன்னரே அதிபரை  மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதாகவும் ஊரடங்கு தேவை என்று எடுத்துரைத்தாகவும் ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காமல் இருந்து விட்டு தற்போது வைரஸ் அமெரிக்காவிற்கு சாவுமணி அடிக்க தொடங்கி பின்னர் ஊரடங்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது  என்ற அறிவிப்பு காலம் தவறிய நடவடிக்கை என்றும்  சிலர் இப்போதாவது தங்களுக்கு ஞானோதயம் வந்ததே என்று ட்ரம்ப் மீது அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

 

Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

4 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago