கொரோனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ப, கனடா பிரதமர் அவர்களின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில் தற்போது, கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை நான் உணர்கிறேன். இதை நான் என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது உடல் நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார். இவர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சிய்யில் ஆழ்த்துவதாக நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…