ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்பட்ட கோவாக்சின்!

ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் ஓமன் நாட்டிற்கு தனிமைப்படுத்துதல் இன்றி செல்லலாம் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
தற்பொழுதும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி ஆஸ்திரேலியாவிற்குள் வரலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கோவாக்சின் மட்டுமல்லாமல், பைசர், அஸ்ட்ராஜெனாகா, மாடர்னா, ஜான்சன் அன் ஜான்சன், சீனோவாக், சீனோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் தடுப்பூசிகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025