நடிகை தீபிகா சிங் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது.
இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மேலும் டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், டவ்-தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளார். அதில் “புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…