ஈரான் சென்றடைந்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published by
Venu

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றடைந்தார்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .இதன் பின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனையடுத்து சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில்,இந்தியா-சீனா உறவுகள் குறித்து இரு அமைச்சர்களும் வெளிப்படையாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சீன துருப்புக்களின் நடவடிக்கைகள், ஏராளமான துருப்புக்களை குவித்தல், ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்,கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ,உஸ்பெஸ்கிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றடைந்தார்.அங்கு ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

25 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

27 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

51 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago