விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன் என கிரெட்டா தன்பெர்க் ட்விட் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் கிரிப்டோ தன்பெர்க் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திகொண்டிருக்கும் போராட்டம் தொடர்பாக ட்வீட் செய்ததற்காக டெல்லி காவல்துறை கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இதனால், கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன். அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன், அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என தெரிவித்தார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…