மலேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமது அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென பதவியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் அவர்கள் தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமராகினார்.
ஆனால் தற்பொழுது கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மொகைதின் யாசின் அவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பதவி விலகினார். இதனையடுத்து துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் அவர்களை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்பதாக மலேசியாவின் 9 ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டதுடன் இன்று பிற்பகல் இவருக்கான பதவியேற்பு விழாவும் நடைபெறவுள்ளது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…