“18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி”…பிரிவை அறிவித்த தனுஷ்-ஐஸ்வர்யா!

Published by
Edison

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்-க்கும்,தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி  திருமணம் நடைபெற்றது.

தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.ஆனால்,அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டிருந்தனர்.ஏனெனில்,நடிகர் தனுஷை விட இரண்டு ஐஸ்வர்யா வயது மூத்தவராக கருத்தப்படுகிறார்.ஆனால்,வயது வித்தியாசம் என்பது இருவருக்கும் இடையில் ஒரு பெரிய பிரச்சனையாக எப்போதும் தெரிந்ததில்லை. இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சிறப்பாகவே வாழ்ந்து வந்த நிலையில்,தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில்,தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என பிற மொழிகளிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும்,தங்களது 18 ஆண்டுகள் நிறைவு பெற்ற திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக,நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

“18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும்,ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும்  இணைந்து பயணித்து வந்தோம்.

இந்த வாழ்க்கை பயணத்தில் வளர்ச்சி,புரிதல்,சரிசெய்தல் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம்.ஆனால்,இன்று நாங்கள் வாழ்க்கை பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.மேலும் எங்களை நாங்களே புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து,இதிலிருந்து நாங்கள் இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தையும்,தேவையான தனியுரிமையையும் எங்களுக்கு வழங்கவும்.ஓம் நமசிவாய”,என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம்,இருவரும் பிரிவதாக ஐஸ்வர்யா அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா ஜோடி பிரிவதாக அறிவித்தது தென் இந்திய சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிவை அறிவித்திருப்பது திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by
Edison

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

24 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

42 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago