ட்விட்டரில் 10 மில்லியன் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் தனுஷ். இயக்குநர், நடிகர், பாடலாசியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட தனுஷ் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற பெற்ற ரௌடி பேபி பாடல் யூடியூபில் 10 மில்லியனிற்கும் மேலாக பார்வையாளர்களை கடந்துள்ளது. தனுஷே எழுதி அவரே யுவன் இசையில், பாடியிருந்தார். இதுவரை எந்த தமிழ் திரைப்படத்தின் பாடலும் 10 கோடி பார்வையாளர்ளை கடந்ததில்லை. முதன் முதலாக ரௌடி பேபி பாடல் அந்த சாதனையை நிகழ்த்தியது.
இதைபோல் ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் பிரபலங்களின் பட்டியிலில் முதலிடத்தை பிடித்து நடிகர் தனுஷ் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 1 கோடி பேர் பின்பற்றுகின்றார்கள்.
இதனை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில், #10MillionFollowersForDhanush என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…