பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷிவானியை பாலாஜி முத்தமிடுவதை போன்று காட்சியுள்ளதை அடுத்து நெட்டிசன்கள் இதுவா நட்பு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடியை காட்டி அந்த சீசனை ஓட்டுவது வழக்கம் . அந்த வகையில் இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி இடையே லவ் டிராக்கை ஓட்டி வருகின்றனர்.ஆனால் அது உண்மையாக இல்லை என்று பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களுடன் விளையாடும் போட்டியாளர்களுக்கும் தெரியும் . இருப்பினும் ஷிவானி பாலாஜியுடனே அதிக நேரத்தை செலவிடுவதும்,பேசுவதும் பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நேற்றைய எபிசோடில் பாலாஜி மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா காதலா என்று ஷிவானியிடம் ஆரி கேள்வி கேட்டதற்கு அன்பான நட்பு என்று கூறி மழுப்பி விட்டார் .இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பாலாஜி மற்றும் ஷிவானி நெருக்கமாக இருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து இதுதான் நட்பா என்ற கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
அந்த வீடியோவில் அனைவரும் தூங்கிய நேரத்தில் பாலாஜியுடன் விளையாடும் ஷிவானியை அவர் முத்தமிடுவது போன்று ஒரு காட்சியுள்ளது .அவர் முத்தமிடுகிறாரா ,இல்லை அவர் காதில் ஏதாவது சொல்கிறாரா என்று தெரியவில்லை.ஆனால் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்ந்து சரமாரியாக விளாசி வருகின்றனர்.இது குறித்து கமல் சார் கேள்வி கேட்பாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…