உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இயக்குனர் முருகதாஸ்! தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

- உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இயக்குனர் முருகதாஸ்.
- பிப்.10-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை இதனையடுத்து, தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், இயக்குனர் முருகதாஸிடம் இழப்பீடு கேட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு வழங்க கோரி தன்னை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இயக்குனர் முருகதாஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக தமிழக காவல்துறை பிப்.10-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025