பொய்யான செய்தியால் மன உளைச்சலுக்கு ஆளானோம்.! பிடிவாரண்ட் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர்.!

Published by
பால முருகன்

நீதிமன்றம் தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக வெளியான செய்தி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.சமீபத்தில் எந்திரன் பட விவகாரத்தில் ஷங்கர் பத்து ஆண்டு காலமாக ஆஜராக காரணத்தால் எழும்பூர் நீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.அதில் எழும்பூர்‌ நீதிமன்றம்‌ எனக்கு எதிராக பிடி வாரண்ட்‌ பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப்‌ பார்த்து நான்‌ அதிர்ச்‌சியடைந்தேன்‌. எனது வழக்கறிஞர்‌ திரு.சாய்‌ குமரன்‌, நீதமன்றத்தை இன்று அணுகி இந்தச்‌ செய்தி குறித்து அவர்களின்‌ கவனத்துக்கு கொண்டு சென்றார்‌. எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும்‌ பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்‌.

இணையத்தில்‌ தினசரி நீதிமன்ற வழக்குகளின்‌ நிகழ்வுகள்‌ பதிவேற்றுதலில்‌ நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல்‌ இப்படி ஒரு பொய்யான செய்‌தி உலவுவதைப்‌ பார்க்க ஆச்சரியமாக இருக்கறது. ‘இந்த விஷயம்‌ எனது குடும்பத்துக்கும்‌, நல விரும்பிகளுக்கும்‌ தேவையில்லாத மன உளைச்சலைத்‌ தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள்‌ இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும்‌ பகிரவேண்டும்‌ என்று தயவுகூர்ந்து அன்‌போடு கேட்டுக்கொள்கிறேன்‌ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

38 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago