மட்டனை ஒரு உணவாக மட்டுமே கருதக்கூடிய நமக்கு அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது சரிவர தெரியவில்லை. குறிப்பாக ஆண்களுக்கு மட்டன் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அசைவ உணவுகள் என்றாலே ஒரு சிலரைத்தவிர பலருக்கும் மிகப் பிடித்த ஒன்றாக அது தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சி மிக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, மேலும் அது தனக்குள் பல ஆரோக்கிய நன்மைகளையும் அடக்கி வைத்துள்ளது. இந்த ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். ஏனென்றால் இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, வைட்டமின் கே மற்றும் ஈ ஆகியவை அடங்கியுள்ளது. மேலும் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், செலினியம் ஒமேகா 3 போன்ற கொழுப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த ஆட்டு இறைச்சியை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ஆண்களின் மலட்டுத் தன்மை நீங்குவதற்கும் மிகவும் உதவுகிறது. மருத்துவத்தின் மூலம் கூட இவ்வளவு வேகமாக குணப்படுத்த முடியாது, அந்த அளவுக்கு ஆண்களின் மலட்டுதன்மையை போக்குவதில் ஆட்டிறைச்சி பெரும்பங்கு வகிக்கிறது.
மேலும் இந்த மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ஆண்களின் உடல் வலிமை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நீரழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் தங்களது கர்ப்ப காலத்தில் நிச்சயமாக மட்டனை எடுத்துக் கொள்ளலாம். ஏன் என்றால் ரத்த சோகை ஏற்படக் கூடிய வாய்ப்புகளை தடுப்பதுடன் அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் காரணமாக உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதயம் வலிமை பெற உதவுவதுடன் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட மட்டனை ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்கள், முதியவர்கள் என அனைவருமே அளவுடன் எடுத்துக் கொள்ளும் பொழுது அது நமக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…