இந்திய -சீன எல்லை லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்கடந்த மாதம் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும் தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று எந்த வித முன் அறிவிப்பு இன்றி பிரதமர் மோடி , தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன் லடாக் சென்றார். நிம்பு பகுதிக்கு சென்ற மோடி அங்கு உள்ள இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், இந்திய – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில், பிரச்சனையை சிக்கலாக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…