உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா…? அப்ப உடனே செக் பண்ணி பாருங்க…!

Published by
லீனா

நமது உடலில் ஏற்படும் உடல்நலக்குறைவை அறிந்து, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.  

நம்மில் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி குடும்பம், வேலை என நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளை கவனிப்பதில்லை. இந்த அலட்சியப்போக்கால் நமது உடலில், பல நாட்களும் இருக்கும் பிரச்னை, உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது.

வலி

பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், முட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுத்தண்டு போன்ற இடங்களில் வலி ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை கூறுவதுண்டு. ஆனால் இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவதில்லை. இதனை வைத்திருந்து நாளடைவில் வலி பொறுக்க முடியாத அளவில்தான் மருத்துவரை அணுகுகின்றனர்.

ஒரு சில மாதங்கள் இந்த வலிகள் நமது உடலில் தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவராய் ஆணுக்கு வேண்டும்.  அப்படியே வைத்து, தொடர்ந்து வலி ஏற்பட்டு வரும் பட்சத்தில், இது உடலில் மற்ற பிரச்சினைகள், அதாவது பெரிய அளவிலான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.

மாதவிடாய்

பெண்களைப் பொறுத்த வரை அனைவருக்குமே மாதவிடாய் சுழற்சி என்பது சரியான நேரத்தில், சரியான முறையில் ஏற்படுவதில்லை. சிலருக்கு ஐந்து நாட்கள், இரண்டு நாட்கள் என்று முந்தி ஏற்படுவதுண்டு. சிலருக்கு நாட்கள் தள்ளிப் போவது உண்டு. சிலருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சி நிற்காமல் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரை அணுகவேண்டும்.

இந்த பிரச்சினை உள்ளவர்கள் அப்படியே வைத்திருந்தால் நாளடைவில் இது புற்றுநோய்களையும், தேவையில்லாத அறுவை சிகிச்சைக்கேதுவான கட்டிகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, பெண்கள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல்,  மருத்துவரை அணுகுவது நல்லது.

நீரிழிவு

சிலர் திடீரென்று இருந்தவாறு உடல் எடை அதிகரிப்பது, இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிப்பது, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றுவது, உடலில் களைப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பாருங்கள். இவையெல்லாம் நீரிழிவு நோய்களுக்கு அறிகுறி. நீரிழிவு நோயை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தினால்தான் அது நமக்கு நல்லது. இல்லையென்றால், இது நமது ஆயுளை குறைத்து பல விதமான நோய்களில் விழுந்துவிட செய்கிறது.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago