வலிமை படத்தில் இடம் பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ஒரு ரொமான்டிக் பாடல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.எனவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.
இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் ஒரு ரொமான்டிக் பாடல் தான் வெளியிடப்போகிறார்களாம். அந்த பாடலின் பெயர் நீ தானே என் உயிர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…