ஓ மண பெண்ணே படத்தின் முதல் பாடல் வருகின்ற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.
கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் ரீமேக் செய்கிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து படத்திற்கான முதல் பாடலை வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…