எப்பா செம.! ரூ.8 கோடி விலையில் ஆடம்பர ஸ்போர்ட் வெர்சன் கார்.! பிரபல நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் ஆடம்பர ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிளாக் பேட்ஜ் எடிஷனில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய பிளாக் பெயின்ட், பிளாக்டு அவுட் எக்சாஸ்ட் பைப்கள், புதிய 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 பி.ஹெச்.பி. பவர், 900 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எஸ்.யு.வி. மாடலாக கனினன் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கலினன் மாடல் 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் 2018-ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலின் துவக்க விலை ரூ. 6.95 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

58 minutes ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

2 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago