, ,

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை.!

By

ஆச்சி மனோரமா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தனது நீண்டகால கனவு என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25 படங்கள் என்ற மைல்கல்லை பிடித்துள்ளார். அண்மையில் தனது 25வது படத்தின் டைட்டில் மோஷன் போஸ்ட்ர் வெளியிட்டார். பூமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தயாரிக்க ரவீந்திரன் பிரசாத் இயக்குகிறார்.

இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய போது, கதையும், கதாபாத்திரமும் பிடித்து ஒப்புக் கொண்ட படம் தான் பூமிகா. இதில் தனக்கு துணிச்சலான கேரக்டர் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து தனக்கு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்றும், அதிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவு என்றும், கண்டிப்பாக தனது கனவு நிறைவேறும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023