மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம்!

Published by
Rebekal

மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்.

கொரோனா ஊரடங்கு தற்பொழுது ஓரளவு தளர்வில் இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசு கட்டாயமான உத்தரவாக கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றுகிறார்களா? முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்படத்தில் அருவி  எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அதிதி பாலாஜி தனது காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 200 அபராதம் விதித்துள்ளனர். அவர் அந்த அபராதத்தையும் செலுத்தி விட்டு பின் முன் கவசம் அணிந்து சென்று உள்ளார். ஆனால் காரில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என தற்பொழுது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

8 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

11 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

13 hours ago