முக கவசம் அணியாமால் வாழ ஏங்குகிறேன் என்று நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் . இதன் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” கொரோனா வைரஸ் தாக்கம் நம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவிற்கு முன்னாள் அனைவரும் சமம் தான் இதில் பணக்காரர் ஏழை என்று வேறுபாடு இல்லை. கொரோனா அனைவரையும் தாக்கி வருகிறது. முன்பு சுதந்திரமாக சுற்றி திரிந்தோம் இப்போது அப்படி சுற்ற முடியவில்லை.
இந்த காலகட்டத்தில் முகக்கவசம் கண்டிப்பாக முக்கியமான ஒன்று . விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அணிய வேண்டும். பாதுகாப்புக்கு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் நங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டியுள்ளது.
எங்களை எதோ ஒரு பயம் பின் தொடர்ந்து வருவதாக உணர்கிறேன். முன்பை போல் எங்களால் படப்பிடிப்பில் கூட சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த மாதிரி பல வேதனைகள் என்னிடம் இருக்கிறது. முக கவசம் அணியாமால் வாழ ஏங்குகிறேன் ” என்றும் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…