திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள், பள்ளிகல்வித்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வின் படி, தற்போது அமலில் உள்ள பொது முடக்க விதி முறைகளை கையாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொது முடக்கும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், திரைக்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…