கார்த்திகை தீபத்திருநாள் அன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. இம்மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி இன்று கார்த்திகை திருநாள் பண்டிகையாகும். அன்றைய தினத்தில் வீட்டில் அனைவரும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும்.
வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் அனைத்து பலனையும் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பூஜை அறையில் 27 தீபங்கள் ஏற்றுவது அனைத்து வித நற்பலன்களையும் தரும். அல்லது 9 தீபங்கள் பூஜை அறையில் ஏற்றலாம். வீட்டின் கூடத்தில்(ஹாலில்) 9 தீபங்கள் ஏற்ற வேண்டும். சமையல் அறையில் 7 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டின் படுக்கை அறையில் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் ஐந்து முக குத்து விளக்கு மற்றும் 27 தீபங்கள் ஏற்றுவது மூலமாக சகல சௌபாக்கியங்களும் உங்களை தேடி வரும்.
கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீட்டில் அனைத்து விதமான மின் விளக்குகளையும் ஏற்றி வைத்து, அதனுடன் மேற்கூறியவாறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் நற்பலனை அடைவீர்கள். அகல் தீபம் ஏற்றுவதற்கு முன் அகலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, நல்லெண்ணெய் விட்டு பஞ்ச லோக திரியிட்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள். இதுபோன்று வழிபடுவதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா விதமான ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…