உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான லவுன்லோட் செய்யப்பட்ட PUBG-யானது இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது.
PUBG வீடியோகேம் ஆப்பை டவுன்லோட் செய்ய மொபைலில் 1GBக்கும் அதிகமான RAM வசதி தேவைப்படும்.எனவே RAM வசதி குறைவாக உள்ள மொபைல் போன்களுக்காக 2019 இல் PUBG lite அறிமுகப்படுத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் PUBG lite ஆனது ஏப்ரல் 29 முதல் செயல்படாது என்று அதன் டெவலப்பரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வந்த ஒரு செய்தி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி PUBG மற்றும் PUBG lite இரண்டும் சில முக்கியமான காரணத்தினால் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து PUBG Lite டெவலப்பர், “எங்களுடன் இருந்த PUBG லைட் ரசிகர்களின் ஆர்வம் மற்றும் ஆதரவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கோவிட் -19 இன் மோசமான காலங்களில், எங்கள் ரசிகர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கை வழங்க முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று கூறினார்.
மேலும் PUBG நிறுவனம், “துரதிர்ஷ்டவசமாக, PUBG Lite யை மூடுவதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம், எங்கள் பயணம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது. PUBG Lite இன் சேவை ஏப்ரல் 29, 2021 (UTC) இல் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறியுள்ளது. இதனால் PUBG பிரியர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…