கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட சம்பவங்களால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீனா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அவர்களுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தொலைபேசி மூலம் 75 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். இவர்களின் பேச்சு வார்த்தைக்குப் பின்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இரு தரப்புப் படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்ட பின்பு, இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக்கின் புற பகுதிகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இதற்கு இரு நாடுகளும் முன்வரவேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் நடந்த சில சம்பவங்களால் இந்தியா மற்றும் சீனா இடையிலான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீன அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேலும் பல நாட்கள் ஆகலாம், இருந்தாலும் எல்லையில் நிகழ்ந்த வன்முறை காரணமாக நல்லிணக்கமும் சிதைந்து போய்விட்டது என இரு அமைச்சர்களும் பேசி உள்ளனர். மேலும், தொடர்ந்து இரு அமைச்சர்களும் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…