டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்த கூகுள்.. ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கம்

Published by
Surya

கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்த செயலிக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்தோரில், ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கியுள்ளது.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வரும் ஒரே ஹாஷ்டேக் #Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia. இதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக பல ஹாஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த ஒரு வாரமாக, யூடுப் மற்றும் டிக்டாக்கில் பரவிய சமூக விரோத விடீயோக்கள்.

அதில் தொடக்கமாக அமைந்தது, டிக்டாக்கில் பிரபலமான பைசல் சித்திகின் விடியோதான். சமீபத்தில் இவர் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் அவர் ஒரு பெண்ணின் மீது “ஆசிட் தாக்குதல்” நடத்துவது போல ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ கூறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், டிக்டாக்கிலிருந்து அவர் அந்த விடியோவை நீக்கினார். ஆனால் அவர் செய்த இந்த செயல், உலகம் முழுவதும் வைரலானது. அது மட்டுமின்றி, அதே போல பல மோசமான விடீயோக்களை பலர் பதிவு செய்து வந்ததால், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து, ஹாஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலியை 1 பில்லியன் (100 கோடி) மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலுக்கு முன், டிக்டாக் செயலியின்  மதிப்பு 4.6 ஆக இருந்த நிலையில், பலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டதால், அதன் மதிப்பு 1.2 ஆக சரிந்தது. 

இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவளித்து வருகின்றது. பிளே ஸ்டாரில் எந்த ஒரு செயலியின் மதிப்பு 1 ஸ்டாராக குறைந்தால், அந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கிவிடும். இந்நிலையில், கூகுள் நிறுவனம், ஒரே நாளில் 16,00,000 மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை நீக்கியுள்ளதால், 1.6 ஆக உயர காரணம் என கூறப்படுகிறது. ஆனாலும் பல தரப்பினர், டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் எனும் நோக்குடன் அந்த செயலுக்கு 1 ஸ்டார் மட்டுமே அளித்து எதிர்மரையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

1 hour ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

11 hours ago