இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
ஐ.நா.வில் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார். சிறுமியின் பேச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப். சிறுமியின் பேச்சை விமர்சனம் செய்தார். அவரின் அந்த செயல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சிறுமி கிரெட்டா துன்பெர்க், கொரோனா பரவும் சூழலில், இந்தியாவில் நீட் தேர்வுகள் ஒத்திவைப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், கொரோனா பரவலின் போது, இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது என தெரிவித்தார்.
அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவும் சூழலில் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஒத்திவைக்க அவர்களின் அழைப்போடு நான் துணைநிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…