tnpsc exam [file image]
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 19) கடைசி நாள் ஆகும்.
குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பிக்காதவர்கள் TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் வழியாக, நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு இல்லை. முதன்முறையாக இரண்டு பணியிடங்களுக்கும் சேர்த்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை (https://www.tnpsc.gov.in) அணுகவும்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…