தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் , தற்போது வலிமை படத்தின் எடிட்டிங் பணிகளில் எச்.வினோத் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…