சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும், பலர் அந்த படங்களை விமர்சனம் செய்து வந்தனர். இதனால் சூர்யாவுக்கு அண்மையில் வெளியான எந்த படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சிறுது பின்னடைவு ஏற்பட்டது. தற்போது சூர்யா இறுதிச்சுற்று வெற்றி படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும், படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . பின்னர் இத்திரைப்படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஞ்சாதே, துப்பறிவாளன், திருட்டு பயலே 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…