அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கிடையே நடைபெறும் கடும் போர்.. 2,300 வீரர்கள் உயிரிழந்த சோகம்!

Published by
Surya

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளிடையே நான்காம் நாளாக கடும் போர் நிலவி வருகிறது. இந்த போரில் அர்மீனியா நாட்டின் 2,300 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அசர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகள், ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாக இருந்து வந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைக்கப்பட்டநிலையில், அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள், தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது.

இதில் அர்மீனியா நாட்டில் கிறிஸ்தவ மக்களும், அசர்பைஜா நாட்டில் இஸ்லாமிய மதத்தினர் பூர்விகமாக கொண்டனர். இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் பகுதியில் 1988 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று கொண்டு வருகிறது.

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நகோர்னோ – கராபக்கின் பெரும்பாலான பகுதிகளை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா அரசு செய்துவந்தது.

மேலும், நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா – அசர்பைஜான் நாடுகள் இடையே பல ஆண்டுகளாக சிறு சிறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினர் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் இணைந்துள்ளது. தற்பொழுது அந்த போர் கடுமையான நிலையில், அசர்பைஜான் தரப்பில் முதலில் தாக்கியது அர்மீனியா படைகள் தான் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த போரில் இன்று காலை வரை 130 பீரங்கிகள், 2000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 25 வான் பாதுகாப்பு ஆயுதங்கள், ஏராளமான கவச வாகனங்கள், 2,300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அர்மீனியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோதலின்போது அசர்பைஜான் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற விவரத்தை அந்நாட்டு ராணுவம் வெளியிடவில்லை.

இந்த போர் பதற்றத்தை தணிக்க உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அர்மீனியா – அசர்பைஜான் நாடுகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago