வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக டீசர் மற்றும் இரண்டாம் பாடலுக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களை உற்சகப்படுத்தும் வகையில், வலிமை பட டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வலிமை திரைப்படதின் டீசர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக எந்த அறிவிப்பும் இல்லாமல் வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதைபோல் டீசரும் எந்த அறிவிப்பு இல்லாமல் அடுத்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் முற்றிலும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். பொருந்திருந்த அடுத்த வாரம் வலிமை டீசர் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். புகழ், யோகி பாபு, சுஜித்ரா, கார்த்திகேயா, பானி,அச்சுந்த் குமார், ராஜ் அய்யப்பா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றியுள்ளார்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…