வரலாற்றில் இன்று(13.05.2020)… கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று !

Published by
Kaliraj

கவிஞர்  கவிஞாயிறு  தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள்  துரைசாமி – புஷ்பம் அம்மாள்.இவரின்  துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர்  34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும்,  நமது தமிழ் நாடு அரசு கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில்  இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.  இவர், கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஏழைகளின் நிலையை இவர் துல்லியமாகப் படம் பிடித்து, உலகத்தைத் தாங்குகின்றவன் உழைப்பாளி என்றும், ஆனால் அவன் எதை எதை யெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்றும், தன் தேவைக்கே ஏழை ஏங்க வேண்டியதாயிருக்கிறது இவ்விழிநிலை மாறப் புரட்சி தேவை எனக் தனது கவிதைகள் மூலம் அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கிறார். இதற்கு உதாரணமாக, 

உட்கார் நண்பா, நலந்தானா? – ஒதுங்கி வாழ்வது சரிதானா? சுட்டு விரல் நீ சுருங்குவதா? – உன் சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?

“புல்லாய்ப் பிறந்தேன் நானென்று – நீ புலம்ப வேண்டாம்; நெல்கூட புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது பூமியின் பசியைப் போக்கவில்லை?

‘கடலில் நான்ஒரு துளியென்று – 蛇 கரைந்து போவதில் பயனென்ன? “கடலில் நான்ஒரு முத்தென்று – நீ காட்டு; உந்தன் தலைதூக்கு /

வந்தது யாருக்கும் தெரியாது – நீ வாழ்ந்ததை உலகம் அறியாது; சந்ததி கூட மறந்துவிடும் – உன் சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?

திண்ணை தானா உன்தேசம்? – உன் தெருவொன் றேயா உன்னுலகம்? திண்ணையை இடித்துத் தெருவாக்கு உன் தெருவை மேலும் விரிவாக்கு

எத்தனை உயரம் இமயமலை! – அதில் இன்னொரு சிகரம் உனதுதலை! எத்தனை ஞானியர் பிறந்ததரை – நீ இவர்களை விஞ்சிட என்னதடை?

பூமிப் பந்து என்னவிலை? – உன் புகழைத் தந்து வாங்கும்விலை! நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!

என்ற இவரின் கவிதை தொகுப்பே சான்று.

Published by
Kaliraj

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

5 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago