மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் கடைகளில் சென்று வடை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் எப்படி வீட்டிலேயே எளிதாக இனிப்பு சீடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மாவு : முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின் இதை ஒரு சுத்தமான துணியில் போட்டு, நன்கு உலர வைத்து அதன்பின் அரைத்து மாவாக இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.
வெல்லப் பாகு : வெல்லத்தை நன்றாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் இதை சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி நன்றாக உருண்டு பதமாக பாகு போல வந்ததும் எடுத்துவிடவும். இந்த பாகுடன் வறுத்து வைத்த மாவு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை : இறுதியாக ஒரு வாணலியில் எள்ளை சேர்த்து வறுத்து மாவுடன் கலந்து கொள்ளவும். பின்பு இதனுடன் வறுத்து அரைத்த உளுந்து மாவு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
சீடை : பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து நான்கு ஐந்து உருண்டைகளாக போட்டு மெதுவாக திருப்பி எடுக்கவும். அவ்வளவு தான், அட்டகாசமான இனிப்பு சீடை வீட்டிலேயே தயார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…