பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைசேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள் வெங்காயம், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கொத்தமல்லி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதனின் பீட்ரூட்டையும் கலந்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதிக்கும் வரை விடவும். பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுத்தால் அட்டகாசமான பீட்ரூட் பக்கோடா வீட்டிலேயே தயார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…