சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் சிக்கனை எடுத்துக் கொண்டு அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயிர், அரை கப் சீரகப் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லித் தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உலர்ந்த வெந்தய கீரை மற்றும் உப்பு ஆகியவை தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பாக சிக்கன் நன்கு ஊறியதும் ஒரு சட்டியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அரை அளவு வெந்து இருந்தாலே போதுமானது.
அதன்பின் மற்றொரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தக்காளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய வரும் பொழுது முந்திரி சேர்த்து வதக்கி இறக்கி வைத்துவிட்டு இந்த கலவையை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிராம்பு, பட்டை தூள், ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக தாளித்து அதனுடன் சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.
பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்டை எடுத்து இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி ஊற, வைத்துள்ள சிக்கனை வைத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை இதில் சேர்க்கவும். பின் அதனுடன் உப்பு மற்றும் க்ரீம் சேர்த்து லேசாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சிக்கன் டிக்கா மசாலா வீட்டிலேயே தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…