காலை நேரத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்து சாப்பிடவேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம் தான். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? தினமும் போல இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் வீட்டில் பிரெட் இருந்தால் இன்று இதை நிச்சயம் செய்து பாருங்கள். வெறும் பத்து நிமிடத்தில் காலை உணவிற்கு ஏற்ற அட்டகாசமான வெங்காய பிரட் பொடிமாஸ் எப்படி சுலபமாக செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
டோஸ்ட் : முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது தோசைக்கல்லை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து எடுத்து வைத்துள்ள பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வதக்க : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கருவேப்பிலை, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொரிந்ததும் இதனுடன் கடலை பருப்பு சேர்த்து நன்கு வறுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
கலவை : பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் நறுக்கி வைத்துள்ள பிரெட்டை சேர்த்துக் கொள்ளவும். பின் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு நன்கு கிளறவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் அட்டகாசமான பிரெட் பொடி மாஸ் தயார். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள் அடிக்கடி செய்து சாப்பிட தூண்டும் அளவிற்கு அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…