கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

retro movie

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா ரசிகர்கள் நேரில் திரையரங்குகளுக்கு சென்று பட்டாசு வெடித்து ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள (ட்வீட்டர்) பக்கத்தில் விமர்சனங்களை பேசி வருகிறார்கள். எனவே, படம் குறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். படத்தை பார்த்த ஒருவர் ” ரெட்ரோ திரைப்படம் முதல் சில நிமிடங்கள் விறு விறுப்பாக இருந்தாலும் அடுத்ததாக போக போக அதனுடைய விறுவிறுப்பின் வேகம் குறைகிறது. சூர்யாவின் முயற்சிகள் இருந்தபோதிலும், படம் குழப்பமான கதைசொல்லல் மற்றும் மந்தமான காட்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” படம் ஒரு குழப்பமான கதை அதை இழுத்துச் செல்கிறது, சூர்யா இருந்தாலும் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்துடன் தான் முடிகிறது. கதை வேறு மாதிரியான கதை இதனை வேறு மாதிரி எடுத்திருந்தால் நிச்சயமாக நன்றாக வந்திருக்கும் ஆனால், நினைத்தபடி படம் வரவில்லை” என கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் “முதல் பாதி நல்லா இருந்துச்சு, அதைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கொஞ்சம் அசத்தலா இருந்துச்சு.சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார், அவரை எப்படி திரையில் பார்க்க விரும்பினோமோ அதனை சரியாக கார்த்திக் சுப்புராஜ் காட்டியிருக்கிறார். 15 நிமிடங்கள் ஒற்றை ஷாட், இடைவேளை பகுதி பயங்கரமாக இருந்தது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் அருமையாக இருந்தது” எனவும் கூறியுள்ளார்.

மற்றொருவர் ” கதை நகர்வு வசனம் கதா பாத்திரங்கள் எல்லாமே கச்சிதமாக செய்து உள்ளனர் .காதல், பாசம், உறவு, நகைச்சுவை என்று அனைத்தையும் கலந்து ஒரு சிறப்பான விருந்தை கொடுத்து உள்ள படம். அதிக திரையரங்குகளுக்கு வந்து இருந்தால் அதிக வசூலை அள்ளி இருக்கும் .நாயகன் நாயகி படத்திற்கு இரு தூண்கள்” என கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த கங்குவா திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து, இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் சுமாரான ஹிட் படமாக ஆகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்